திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாக கூட்டணியில் மாற்றுத்திறனாளிகள் துறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட உதவி ஆட்சியர் மந்தாகினி அவர்கள் தலைமையில் வருவாய் கோட்ட அளவிளான மாற்று திறனாளிகளுக்கு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கு சென்றடைய அனைத்து அதிகாரிகளுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளிடம் மாவட்ட உதவி ஆட்சியர் கூறினார்.

மாற்றுதிறனாளிகள் கூட்டத்தில் சாய்தள வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ள இடத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையில் உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் . மாற்று திறனாளிகளுக்கும் பணிதள பொறுப்பாளர் பணி வழங்க வேண்டும் எனவும் தாலுக்கா அலுவலகங்களில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை எனவும் கூட்டம் வெகுதொலைவில் நடைபெறுவதால் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து மாற்று திறனாளிகளுக்கு வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளதால் கூட்டம் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பல்வரி கோரிக்கைகளை முன் வைத்தனர்.
செங்கம் தாலுகா செய்தியாளர்
கலையரசு
செங்கம் தாலுக்கா செய்தியாளர்
கலையரசு
No comments:
Post a Comment