திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன், காமராஜ்நகரில் ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். நகர செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரேசன் கடை கட்ட பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். மேலும் அதே பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒ.ஜோதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment