அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி இதில் மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 April 2023

அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி இதில் மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை காண விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து 100க்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் 


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் செய்யாறு வடக்கு  ஒன்றியம் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.


இதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தூளி கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் மற்றும் அமமுக ஒன்றிய குழு உறுப்பினர் கௌசல்யா உள்ளிட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் சால்வை அணிவித்து அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன்,  மாவட்ட துணை செயலாளர், நகர செயலாளர் வெங்கடேசன், நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், ஆவின் தலைவர் பரிபாபு, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.

No comments:

Post a Comment

Post Top Ad