திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு மண்டல காவல்துறை சார்பில் நடந்த துப்பாக்கிச் சூடு போட்டியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கே கண்ணன் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் 03-04-2023 மற்றும் 04-04-2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற வடக்கு மண்டல துறையினர் சார்பில் நடந்த துப்பாக்கிச் சூடு போட்டியில் காவல்துறை உயர் அதிகாரிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே கார்த்திகேயன் ஐபிஎஸ் அவர்கள் அனைத்து துப்பாக்கி சுடுதல் மேலும் முதலிடத்தை பெற்றார். இன் சாஸ் (INSAS) ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும் பிஸ்டல் (PISTOL) ரக துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாம் இடத்தில் பெற்று பரிசுகளைப் பெற்றார். சக காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
- திருவண்ணாமலை செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment