திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மருதாடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் லோகேஸ்வரன், அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி யூனியன் சேர்மன் ஜெயமணி வரவேற்றார்.

விழாவில் கலந்து கொண்ட கிளைக் கழக நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவத்தை முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட அமைத்தலைவர் டி. கே.பி. மணி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சத்தியவாடி பாஸ்கர், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்யாறு தாலுகா செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment