திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்ச்சிறுபாக்கம், ராதாபுரம், தண்டராம்பட்டு, எடத்தனூர், திருவடத்துனூர், சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் சுமார் ரூ .2 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இ. ஆ .பா அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்கும் படி கேட்டுக் கொண்டார். பின்னர் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளிகளிடம் நலம் விசாரித்து அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். ஆய்வில் துணை ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், ஒன்றிய குழு தலைவர் உடனிருந்தார்கள்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment