இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமகவின் மாவட்ட செயலாளர் இ .சரவணன் தலைமை வகித்தார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பி.சுப்பிரமணி, கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை பொது செயலாளர் இ.ராஜா வரவேற்றார். நிறுவனத் தலைவர் ந. சக்தி படையாட்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது, கடந்த அண்ணா திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தி ஜூன் 2022 இல் நடைமுறைக்கு வந்தது.
ஆனால் அதன் பின்னர் வந்த இந்த திமுக அரசு தன் பின்புலத்தால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து வன்னியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் செய்தது. இதுவரை இந்த அரசு இட ஒதுக்கீடு கொண்டுவர எந்தவித முன்னெடுப்பு செய்ததா என்ற இல்லை. ஏறத்தாழ 21 சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய வன்னியர்களுக்கு 3 அமைச்சர்கள் கொடுத்து வஞ்சித்தது இந்த அரசு. அரசு உயர் பதவிகளில் வன்னியர்களுக்கு இடமே இல்லை. சென்னையில் உள்ள நமது அரசியல் பிதாமகன் ராமசாமி படையாட்சி பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதே இல்லை.

ஆனால் வெகு தொலைவில் இருக்கும் தேவர் பெருமகனார், தீரன் சின்னமலை ஆகியோர்களுக்கு மட்டும் நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார் .வருகின்ற மே மாதம் 31க்குள் நமக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .வருகின்ற கல்வி ஆண்டிலாவது உயர்கல்வி படிப்பதற்கும், அரசு பணியில் அதிக அளவில் வன்னிய மாணவ மாணவிகள் சேருவதற்கும் உதவியாக இருக்கும். இந்த அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்தாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்தால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் நாங்கள் குச்சிகளை உயர்த்திக்கொண்டு மிகப் பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தி உங்கள் ஆட்சி கவிழக் கூடிய சூழலை உருவாக்குவோம்.
இட ஒதுக்கீடு அமல்படுத்தாமல் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் 18 மாவட்டத்திற்குள் வாக்கு சேகரிக்க உள்ளே நுழைய விடமாட்டோம். நாங்கள் அமைதியான முறையில் அறவழி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் மீண்டும் எங்களை வன்முறையாளராக மாற்றாதீர்கள் என இவ்வாறு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் ஜெய் ஹரி, எம். சீனிவாசன், டி கோவிந்தராஜ், ஆர் .சி .ராமலிங்கம், கவிஞர் கணேசன், தீபம் சண்முகம், எல். கண்ணன், எல் ஆனந்தன், ஐயப்பன், கே விஜயகாந்த், ராமசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டனர், இறுதியில் மத்திய மாவட்ட செயலாளர் சி. பரசுராமன் நன்றி கூறினார்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment