திருவண்ணாமலை மாவட்டம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நவம்பட்டு, வேளையாம்பாக்கம், கல்லொப்பட்டு, கண்டியாங்குப்பம், பழையனூர் ஆகிய ஊராட்சிகளில் 15-4-23 அன்று பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப, நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன், அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷிணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங்,இ.ஆ.ப. உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment