சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 132 வது பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 April 2023

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 132 வது பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்.


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மோரணம் கிராமத்தில்  பொன்னி நகர் பகுதியில் தமிழ் புத்தாண்டு மற்றும் சட்ட மாமேதை டாக்டர் BR.அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்  சார்பில் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் மற்றும் 132 மரக்கன்றுகள் நடப்பட்டது.

மாணவர்கள் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை பற்றி  பேசினார். அவர்களை சமூக ஆர்வலர்கள் R.கோபிநாத், வரவேற்புரை நிகழ்த்தினார்  M.மதன்குமார் R.செல்வகுமார் R.கோடீஸ்வரன் மற்றும் S.சதீஷ் அம்பேத்கர் வாழ்க்கை குறித்து கருத்துக்களை கூறிய மாணவர்களை உற்சாகப்படுத்தினார்  மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள்  மற்றும் பெண்களுக்கான போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது  சதுரங்கம், கேரம் போர்டு, மட்டைப்பந்து, கைப்பந்து மற்றும்  கபடி, 100 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எரிதல், ஆண்களுக்கான போட்டி நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன வெற்றி பெற்றவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, இறுதியாக P.சதீஷ் அவர்களால் நன்றி உரை வழங்கப்பட்டு கலை நிகழ்ச்சி முடிவுற்றது . 


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad