திருமணம் நிச்சயித்த இளம் பெண் திடீர் மாயம் பெற்றோர்கள் பரிதவிப்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 April 2023

திருமணம் நிச்சயித்த இளம் பெண் திடீர் மாயம் பெற்றோர்கள் பரிதவிப்பு.


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த (29 வயது)பெண் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு செய்யாறு பகுதியை சேர்ந்த வாலிபருடன் கடந்த மாதம் 10-ந் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. 

இந்த நிலையில் இளம்பெண்  வேலைக்கு சென்று வருவதாக அதிகாலை சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் பெண்ணின் தம்பி அக்கா காணவில்லை என்று உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். இளம் பெண் கிடைக்காததால் இது குறித்து பிரம்மதேசம் போலீசில் பெண்ணின் தம்பி புகார் அளித்தார். 


புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி யாராவது கடத்திச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.



- செய்யாறு செய்தியாளர்செய்தியாளர் MS.பழனிமலை.

No comments:

Post a Comment

Post Top Ad