திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் பாரதத் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் அர்ஜுனன் தபசு விழா நடைபெற்றது.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனர் தவமிருந்து தபசு மரம் ஏறி சிவபெருமானிடம் அம்பு வாங்கும் நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்த திருவிழாவை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், கடைசிகுளம், புன்னை, கல்லாங்குத்து உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment