ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் பக்தர்கள் செல்ல தூய்மை பணிகள் நடக்கிறது. கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை. சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு திட்டிவாசல் நுழைவு பகுதியிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன. 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் வசதி குறித்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர். 14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மையான முறையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment