வந்தவாசியில், நகர தி.மு.க- மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 April 2023

வந்தவாசியில், நகர தி.மு.க- மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், நகர தி.மு.க- மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி  நகர செயலாளர் எ.தயாளன் தலைமையில் நடைபெற்றது. 

நகர அவைத்தலைவர் நவாப்ஜான், முன்னிலை வகித்தனர்.நகர சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் அப்துல் ரசூல் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டு,  வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன், எம் எல் ஏ அம்பேத்குமார்,   உரையாற்றினர்.  

இந்த நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர். சீதாபதி, நகர மன்ற தலைவர் எச்.ஜலால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் காதர் ஷெரீப், ஹஜரத் சிராஜுதீன் பாகவி, யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் டி எம் பீர்முகமது தொழிலதிபர்  இஷாக், டாக்டர் கோகுலகிருஷ்ணன் ,ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஜெ அக்பர்,லியாகத் பாஷா, நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார், நாகூர் மீரான், கிளை செயலாளர் சாகுல் அமீது, முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர்கள் அப்துல் வகாப், காதர் ஒலி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.

No comments:

Post a Comment

Post Top Ad