திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தலைமை தாங்கினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் வ.உமா வரவேற்று பேசினார். பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், மு.மணி, கு.கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஒன்றிய செயலாளர் ஞானவேல் தினகரன் பார்த்திபன் சுந்தரேசன் ராம் ரவி மா கி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment