திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது விவசாய கிணற்றில் ஆண் சடலம் இருப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போது அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன் என தெரியவந்தது.

அவரது மனைவி நேற்று இரவு வயல்க்கு செல்லவதாக சொல்லி விட்டு சென்றார் என்றும் காலை விடிந்தும் வீடு வரவில்லை அதனால் நாங்களும் எங்கள் உறவினர்கள் என் கணவரை தேடி கொண்டு இருப்பதாக கூறினார்கள். அது மட்டும்மல்லாமல் அவரது உடலில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது.பின்னர் தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment