திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் போளூர் லிருந்து செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் தென்மாதிமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து.விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலே பலி, தகவல் அறிந்து வந்த போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி போது பலியானவர்கள் மேல் பாலூர் கொல்லை கொட்ட பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மனைவி ராஜேஸ்வரி என தெரியவந்தது.

இவர்கள் இருவரும் ஆரணியில் கோணிப்பை தைக்கும் பணியை முடித்து வீடு திரும்பும் போது எதிரே வந்த கரூர்லிருந்து செங்கம் வழியே வேலூர் சென்ற கார் அதிவேகத்தில் அவர்கள் மீது மோதியதில் இரு சக்கர வாகனம் நொறுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment