திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு டி - கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் வயது (56) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தினந்தோறும் மிரட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

பாதிப்படைந்த மாணவி தலைமையாசிரியை மீனா சாந்தி மேரிடம் சொல்லி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள் .அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் தனலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர் விசாரணை நடத்திய போது 24 மாணவிகளை பாலியல் தொல்லை செய்ததாக மாணவிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment