திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 24 April 2023

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் உச்சிமலைகுப்பம், விண்ணவண்ணுர் ஊராட்சிகளில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் த.செந்தில்குமார் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், ஜுஸ் மற்றும் பழங்கள் போன்றவற்றை வழங்கினார். உடன் திமுகவின் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ப.அருணகிரி, ஒன்றிய துணை செயலாளர்கள், த.சிவகுமார், சக்தி, தவமணி, முருகேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு. 

No comments:

Post a Comment

Post Top Ad