திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயில் பணிக்காக ரூ.5 கோடி இந்து அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உலக புகழ்பெற்ற ஆன்மீக தலமாகும் . இக்கோவிலுக்கு உள்ளூர் ,வெளியூர் மற்றும் வெளிநாடு பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் காண வருகின்றனர்.

விடுமுறை நாட்கள் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு வருவதால் கோவிலில் இரவு நேரங்களில் கோபுரம் தரிசனம் காண (கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்) கோபுரங்களில் அனைத்து நாட்களிலும் கோபுரம் வண்ணமயமாக மின்ன வண்ண மின் விளக்குகள் அமைக்கவும், அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், தீர்த்த வாரி தீர்த்தம் போன்ற குளங்களை சீரமைக்கவும் மற்றும் பல புனரமைத்தல் பணிக்காக ரூ 5 கோடி இந்து அறநிலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment