திருவண்ணாமலை மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ள 300 காவல் கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் எ.வ .வேலு இன்று திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, அண்ணாதுரை MP , திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் ஐ.ஏ.எஸ், டிஐஜி முனுசாமி ஐ.பி.எஸ், எஸ்பி கார்த்திகேயன் ஐ.பி.எஸ், செங்கம் எம்எல்ஏ கிரி, கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment