திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் ஊராட்சியில் செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய கழக செயலாளர் த.செந்தில் குமார் தலைமையில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி, அக்கட்சியின் தலைமை பொறுப்பாளர் திரை.கென்னடி, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை குறித்தும் கட்சி வளர்ச்சி பணிகளை குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள், மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார். உடன் அக்கட்சியின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

No comments:
Post a Comment