திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பதவியை பறித்த மத்திய பாஜக அரசை கண்டித்து அறவழிபோராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை தலைவர் குணசேகரன் தலைமையில் செங்கம் ஒன்றிய குழு தலைவர் செங்கம் ஜி.குமார் கண்டன உரையாற்றினார். உடன் தண்டராம்பட்டு மற்றும் செங்கம் ஒன்றிய, மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் பலரும் அறவழிப்போராட்டதில் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment