திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அசனமாப்பேட்டை அக்னிச் சிறகுகள் லயன் சங்கம் மற்றும் செங்கோட்டையன் மருத்துவமனை இணைந்து தண்ணீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் லயன் சங்க மாவட்ட தலைவர் மா. சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் லயன் கணேசன் மற்றும் லயன் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். பெருங்கட்டூர் இந்தியன் வங்கி மேலாளர் அஜய் தாஸ் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் பழ வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை லயன் டாக்டர் மா.செங்கோட்டையன் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். பொதுமக்கள் கலந்து கொண்டு நன்றி கூறினர்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment