திருவண்ணாமலை மாவட்டம் மே மாதம் 1 தேதி 860 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார், திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 860 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் காலை 11மணிக்கு தொடங்கி மதியம் 2 வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிராம ஊராட்சி நிர்வாக பொது நிதி செலவினம், திட்ட பணிகள், கிராம ஊராட்சிகளில் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர்,அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை, அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு,பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு, பிரதம மந்திரி சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிகலாம் என மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment