திருவண்ணாமலை மாவட்டம் காந்திநகர் பகுதியில் காய்கறி சந்தை ரூ 29.25கோடி மதிப்புள்ளான கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் காந்திநகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் 2023 -24 கீழ் ஒருங்கிணைந்த காய்கறி பூ சந்தை பழக்கடைகள் கட்டுவதற்கான தொடக்க பூமி பூஜை பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். உடன் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், டாக்டர் எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், கார்த்திக் வேல்மாறன்,நிர்மலா கார்த்திக் வேல்மாறன்,ராஜாங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment