அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 22 April 2023

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பன்ரேவ் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளி தலைமையாசிரியர் மன்னார்சாமி தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது, மாணவர்கள் இடைநிற்றல் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் வீடு வீடாக சென்று இந்தாண்டு சேர்க்கை தொடங்கி விட்டது எனவே பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க விழிப்புணர்வு குறித்து அட்டைகளில் எழுதியும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  

                         

- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad