செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க கோரி நடந்த பைக் பேரணியில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் தொடர்ந்து செய்யாறு மாவட்டம் கோரி சப் கலெக்டர் ஆர்.அனாமிகாவிடம் 2300 மனுக்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி பைக் பேரணி திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கியது. பேரணி காந்தி சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ஆற்காடு சாலை வழியாக சப் கலெக்டர் அலுவலகத்திடம் நிறைவடைந்தது.

தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் வேண்டும் வேண்டும் செய்யாறு மாவட்டம் அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர் பைக் பேரணியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செய்யாறு தாலுக்கா செய்தியாளர்
MS.பழனிமலை
No comments:
Post a Comment