சிறப்பாக பணியாற்றிய ஜனார்த்தனன், சி,நெப்போலியன் உள்ளிட்டோரை பாராட்டினர். தேசிய தலைவர் எ.குமார் ஆச்சாரி தலைமை வகித்தார். அரக்கோணம் எம்.மருதராஜ கணேஷ் ஆர்.சிவக்குமார் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். மாநிலத்தலைவர் வி.ஜெகதீசன் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் எ.சரவணன் ஆச்சாரி ஆகியோர் துவக்க உரையாற்றினர்.
திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எஸ்.சங்கரன், மாநில அமைப்புச்செயலாளர் ஜி.கே.ஆறுமுகம் ஆகியோர் வரவேற்று பேசினர். புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமார், தலைவர் டி.நாகலிங்கம் ஆச்சாரி ஆகியோர் ஐவர்ண கொடி ஏற்றிவைத்தனர்.

அகில இந்திய பொதுச்செயலர் மறைந்த அரக்கோணம் இ.மாணிக்கவேலு அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அரசின் நிதித்துறை இணைச்செயலராக பணிநிறைவு பெற்ற சி.நெப்போலியன், அகில பாரதிய ஸ்வர்ணகார் சங்க தேசிய தலைவர் காஷ்மீர் சிங், பொதுச்செயலாளர் தாகர்சந்திராபொதார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டையினை வழக்கறிஞர் கே.மூர்த்தி வழங்கினார். சீனந்தல் மடாலயத்தின் 65வது மடாதிபதி விஸ்வகர்ம ஜெகத்குரு சிவஶ்ரீ. சிவராஜ ஞானாச்காரிய குரு ஸ்வாமிகள் அருளாசி வழங்கி பேசினார்.
வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிறுவனர் மற்றும் செயலாளர் ஆசிரியர் செ.நா.ஜனார்த்னன், தமிழக அரசின் நிதித்துறை இணை செயலாளராக பணிநிறைவு பெற்ற சி.நெப்போலியன் ஆகியோரின் சேவைகளை பாராட்டி அகில இந்திய சொர்ணகார் சங்க தலைவர் காஷ்மீர் சிங், தேசிய தலைவர் எ.குமார், பொதுச்செயலாளர் எம்.மருதராஜ் கணேஷ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கேடையம் வழங்கி பாராட்டினர்.
நிருவாகிகள் என்.எஸ்.ரமேஷ், கே.பி.சிவநேசன், எம்.லோகநாதன், கே.வெங்கடேசன், ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.அழகேசன், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் டி.மணிகண்டன், போளுர் எ.சரவணன், வந்தவாசி எஸ்.சங்கரன், கே.வெங்கடேசன், என்.நாராயணன், மா.வி.கோவிந்தராசன், டி.எம்.கோபால், எஸ்சதோஷ் விஸ்வப்பிராமண சத்திர நிர்வாக சங்க உயர்மட்டக்குழு நிர்வாகிகள் கே.அப்பாதுரை, டி.கிருஷ்மூர்த்தி, டி.பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய அளவில் தமிழ்நாடு கேரளா, புதுவை, கர்நாடக, பஞ்சாப், மேற்குவங்கம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்தோர் உள்ளிட்ட 300பேர் பொதுக்குழுவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தமிழ்நாடு பாடநூல் கழக 10ஆம் வகுப்பு பாடநூலிர் சிலப்பதிகாரம் தலைப்பில் பொற்க்கொல்லர்களை இழிவுபடுத்திம் வாத்த்தையை நீக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு பிற்படுத்தப்பேட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் பள்ளி சான்றிதழில் பத்தர் ஆசாரி ஆச்சாரி என்றிருந்தாலும் விஸ்வகர்மா என சாதி சான்றிதழ் வழங்க உத்திரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment