திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குண்ணி பெண்ணையாறு காப்புக்காடு பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட வெள்ளாலம்பட்டி தி.மு.க கிளை செயலாளர் பச்சையப்பன் என்பவரின் ஆதரவாளர் குமரேசன் என்பவரை வனத்துறையினர் மடக்கி பிடித்து மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இளங்குண்ணி பெண்ணையாறு காப்புக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெறுவதாக செங்கம் வனச்சரக அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு டாக்டர்களில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த நபர்களை மடக்கி பிடிக்கும் என்ற போது திமுக கிளை செயலாளர் பச்சையப்பனின் ஆதரவாளர் குமரேசன் என்பவரை கைது செய்து திமுக பிரமுகரின் டிராக்டரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment