புதிய கால்நடை மருந்தகம் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 August 2024

புதிய கால்நடை மருந்தகம் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.


மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம்,கீழ் நகர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு புதிய கால்நடை மருந்தகம் கட்டிடம் கட்ட ரூ.47.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. 

இப்பணிகள் முடிவடைந்ததையொட்டி புதிய கால்நடை மருந்தகம் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 20/8/24 அன்று காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி கால்நடை மருந்தகம் கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட இடத்தில் பூஜை செய்து திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிடிஓ தசதராமன் தலைமை தாங்கினார். திறன் மேம்பாட்டு துறை தொழிலாளர்களின் பிரதிநிதி எஸ்.எஸ்.அன்பழகன், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, தாசில்தார் கவுரி, கால்நடை உதவி மருத்துவர்கள் தமிழரசன், கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் சுந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் கீதா மோகன், பகுத்தறிவு மாமது, பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                      


இதில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளாட்சி பிரதிநிதிகள், கால்நடை துறையினர் பொது மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.          


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad