வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வுக் கூட்டம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 13 March 2024

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வுக் கூட்டம்.


அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.        
                              

இந்நிலையில் அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 12-3-24 அன்று நடந்தது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். டிஆர்ஓ பிரியதர்ஷினி,கூடுதல் கலெக்டர் ரிஷப்,செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா,ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.     


இந்த ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மை துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும்,வேளாண் உபகரணங்கள், உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது  குறித்தும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தினர்.                  


மேலும் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், வருவாய் மற்றும் பணிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் இ சேவை மையத்தின் மூலம் 20 வகையான சான்றிதழ் வழங்கும் பணிகள், பள்ளிக்கல்வி துறை மூலம் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பபட்டுள்ள நடவடிக்கைககள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார்            


மேலும் உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் திட்டத்தில் போளூர் மற்றும் ஆரணி பகுதியில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் பாராட்டினார்.        


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad