திருவண்ணாமலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம். கலெக்டர் தலைமையில் நடந்தது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Tuesday, 12 March 2024

திருவண்ணாமலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம். கலெக்டர் தலைமையில் நடந்தது.

photo_2024-03-12_22-47-23

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு தேர்தல் பணிகளுக்கென நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான பணம் மற்றும் இதர பொருட்கள் நடமாட்டத்தினை கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்ய நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட நிலையிலான அலுவலர்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் 11-3-24 அன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற தேர்தலின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரிஷப், SP கார்த்திகேயன், DRO பிரியதர்ஷினி, உள்பட அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.                                   


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad