திருவண்ணாமலையில் வரும் 3ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம். பிரமாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம். அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Sunday, 24 March 2024

திருவண்ணாமலையில் வரும் 3ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம். பிரமாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம். அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

photo_2024-03-24_21-49-27

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 3ந் தேதி பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதையொட்டி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.


மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ந் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதையொட்டி கடந்த 20ந் தேதி தொடங்கி வரும் 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. வரும் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வரும் 30ம் தேதி மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. இந்நிலையில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 24 நாட்கள் பாக்கியுள்ள நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தனது சூறாவளி தேர்தல் பிரச்சார பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 22ந் தேதி திருச்சியில் தொடங்கினார்.               


தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 3ந் தேதி திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அதையொட்டி திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே முதல்வர் பங்கேற்க இருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி விசாலாமான திறந்தவெளி மைதானம் பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.         


இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தையும் அதற்கான ஏற்பாடுகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு 22ந் தேதி மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுக்கூட்ட மேடை அமையும் இடம்,பொதுமக்கள் அமரும் திறந்தவெளி மைதானம்,பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது, ஆய்வின் போது மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், அருணை வெங்கட், ஏ.டபிள்யு.சர்தார் காசீம், தொண்டரணி ஷெரீப் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.    


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad