திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 2 1/2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்செய்யப்படுகிறது. அமைச்சர் எ.வ.வேலு பேச்சு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 11 January 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 2 1/2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்செய்யப்படுகிறது. அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.


திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ.43 1/2 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நிர்வாக அலுவலக கட்டிட திறப்பு விழா, வருவாய்துறை சார்பில் பட்டா, சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 10-01-24 அன்று நடைபெற்றது. 

விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் அமரவாணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துக்கொண்டு ஆவின் புதிய நிர்வாக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.                   


முன்னதாக அவர் பேசுகையில் 'நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து அதனடிப்படையில் தான் இந்த திருவண்ணாமலை பால் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தை இன்றைக்கு நாம் நிறுவி இருக்கிறோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 வட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அளவில் அதிக கறவை மாடுகள் கொண்ட மாவட்டத்தில் திருவண்ணாமலை 2வது இடத்திலும் பால் உற்பத்தியில் 3வது இடத்திலும் இருக்கிறது. மாவட்டத்தில் 522 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக சுமார் ரூ.22.42 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது ' என்றார்.                            


விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, பால்வள துணை பதிவாளர் கோபி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, திருவண்ணாமலை ஒன்றியக் குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணை தலைவர் ரமணன், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்செல்வன், தி.மு.க.நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், கார்த்திக்வேல்மாறன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் ஆவின் துணை மேலாளர் ரங்கசாமி நன்றி கூறினார்.                              


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad