திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு பராரித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் 08-12-23 அன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்தும் மணல் கடத்தல், உணவு பொருள் வழங்கல், உணவு பாதுகாப்பு,மது ஒழிப்பு தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கடைகளில் போதை பொருள்கள் விற்பனை மற்றும் மணல் கடத்தலை தடுக்க சிறப்பு படை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்க கிராம அளவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது, சாலை விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும், திருவண்ணாலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சிறப்பு குழு நகரம் முழுவதும் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், இதர துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment