இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு போரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்/ - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 November 2023

இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு போரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்/


திருவண்ணாமலையில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு  மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு போரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 07-11-23 அன்று காலை அண்ணா சிலை அருகில் நடந்தது. 

கண்டன ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன் ஹாபிழ் ஷேக் முஜக்கீர் கிராஅத் ஓதினார்.  ஷேக் முபாரக் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். தொழில் அதிபர் ஹாஜி ஜமாலுத்தீன் முன்னிலை வகித்தார். SDPI நகர செயலாளர் ராஷித் கண்டன கோஷங்களை எழுப்பினார். இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி, காங்கிரஸ் கட்சி ஷாஜஹான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சி  மற்றும் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர். 


மனித நேய மக்கள் கட்சி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்துஸ் ஸமத் இஸ்ரேல் நாட்டின் அநீதிக்கு எதிராக சிறப்பாக உரையாற்றி கண்டன கோஷம் எழுப்பினார். மாவட்ட காஜி அப்துல் காதிர் மன்பயி, மற்றும் அப்துர் ரஹ்மான் மௌலவி உடைய துஆவுடன் போராட்டம் நிறைவு பெற்றது.   


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad