செங்கம் அருகே தொடர் விபத்தினால் சாலை ஓரங்களில் இடையூராக உள்ள மரம் , செடிகளை அகற்றும் பணி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 27 October 2023

செங்கம் அருகே தொடர் விபத்தினால் சாலை ஓரங்களில் இடையூராக உள்ள மரம் , செடிகளை அகற்றும் பணி.


செங்கம் சாலையில் நடைபெறும் தொடா் விபத்துகளை தடுப்பதற்காக சாலையோரங்களில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் கிராம மக்கள்  ஈடுபட்டனா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள திருவண்ணாமலை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் அக்.15-ஆம் தேதி பக்கிரிபாளையம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் 7 பேரும், 23-ஆம் தேதி இரவு பக்கிரிபாளையத்தில் இருந்து சுமாா் ஓரு கிலோ மீட்டா் தொலைவில் கருமாங்குளம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் 8 பேரும் என 15 போ உயிரிழந்தனா். 

மேலும், இந்த சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த சாலையில் விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், விபத்து நடைபெற்ற பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மெதுவாக செல்ல போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.


இதனிடையே, விபத்து நடைபெற்ற சாலையின் ஓரங்களில் செடி, கொடிகள் ஏராளமாக வளா்ந்துள்ளன. இதனால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் ஓட்டுநா்களுக்கு தெரியாததால் விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே, அப்பகுதியில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை மேல்செங்கம் முன்னாள் தலைவா் குப்பன் தலைமையில் அரசங்கண்ணி கிராம மக்கள் வருவாய்த் துறை, வனத்துறையினருடன் இணைந்து பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பணியானது, மேல்செங்கம் முதல் அரசங்கண்ணி வரை நடைபெற்று வருகிறது.


- செங்கம் செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad