திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் BSNL அலுவலம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு ஒரு உரிமைக்கான சங்கத்தின் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கம் வட்டார தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
100 நாள் வேலைக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 750க்கும் மேற்பட்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் அவர்களது பாதுகாவலர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
- செங்கம் செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment