திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கருமாங்குளம் அருகே 23-10-23 இரவு திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரை நோக்கி சென்ற அரசு பஸ்சும்,பெங்களுரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த டாடா சுமோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுமோவின் முன் பகுதி நொறுங்கியது.அதில் பயணம் செய்த 11 பேரில் 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற அனைவரும் உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மேலும் இரண்டு பேர் பலியாகினர். மற்ற 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த செங்கம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். டாடா சுமோவில் வந்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? விபத்து நடந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
படுகாயமடைந்து பேசும் நிலையில் ஒருவர் மட்டுமே உள்ளார்.அவர் பேசும் மொழி போலீசாருக்கு புரியவில்லை. இது குறித்து செங்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment