திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் மாதமாதம் பெளர்ணமி முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.இந்நிலையில் ஆவணி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் என பலர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது, கோயில் உண்டியலில் 1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேலும், 230 கிராம் தங்கம், 993 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு பணங்களும் (கரன்சி ) உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் 2 கோடியை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment