திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்) பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (கிராமியம்) பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், முதல் அமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட இலக்கு விகிதாச்சார சாதனை மீதான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். மேலும் மண்டல அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் திட்டப்பணிகள் முன்னேற்றம் தொடர்பான ஆய்வு நடத்தி அதனை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள், உதவி செயற்பொறியாளர்ரள் (ஊரக வளர்ச்சி) அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment