திருவண்ணாமலை, நகரம் பழைய மருத்துவமனை பின்புறம் உள்ள பெருநாள் தொழுகை மைதானத்தில் இன்று 29-6-23 காலை 7 மணிக்கு பக்ரீத் தொழுகை நடந்தது. ஜாமிஆ மர்க்கஸ் முத்தவல்லி சமியுல்லாஹ்(எ) கௌசி தலைமை தாங்கினார்.


மௌலவி ஜபியுல்லாஹ் பெருநாள் தொழுகை நடத்தினார். துராப் பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அகமத், மாவட்ட காஜி மௌலவி அப்துல் காதிர், தமுமுக மாவட்ட செயலாளர் கலிமுல்லாஹ், பத்திரிகையாளரும், சமூக சேவகரும், அனைத்து சமுதாய நண்பராக பத்திரிகையாளர்களால் பாராட்டு பெற்ற ஹாஜி முஸ்தாக் அகமத் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். பள்ளி நிர்வாகி அன்சர் மைதானத்தை சுத்தப்படுத்தி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.
- திருவண்ணாமலை மாவட்டச் செய்தியாளர் முஸ்தாக் அகமத்
No comments:
Post a Comment