திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு பே கிரி MLA அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு துவக்கி வைத்தார். செங்கம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் .இந்நிலையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தது மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிகழ்வில், செங்கம் நகர செயலாளர் மு அன்பழகன், பேரூராட்சி மன்றத்தலைவர் எச் சாதிக்பாட்ஷா, ஒன்றிய செயலாளர்கள் த செந்தில்குமார், த மனோகரன் அ ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் செ செந்தில்குமார் சகுந்தலாராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment