திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு பிரிவில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் கமலக்கண்ணன் இவருக்கு காவல் துறை சார்பில் சந்தேகக்குரிய மரணம் ஏற்படும் போது சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்ய வற்புறுத்துவதாகவும், மருத்துவர்களை மிரட்டுவதாகவும், இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச சென்றுள்ளார்.


அப்போது மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப அவர்கள் கமலக்கண்ணனை தரக்குறைவாக பேசி உன்னை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றி விடுவேன் என ஒருமையில் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாத காரணத்தால் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- செய்தியாளர் T.R.கலையரசு
No comments:
Post a Comment