திருவண்ணாமலையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 June 2023

திருவண்ணாமலையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி.


திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிசெய்ததால்பரபரப்புஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் குப்பைமேடு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பணிகளை துவக்கினர்.
 

அப்போது அப்பகுதி விவசாய பெண்களோடு சேர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் உட்பட பல்வேறு கட்ட நூதனப் போராட்டங்களை நடத்தி வந்தனர். 18-வது நாளில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க சென்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து அனுமதி மறுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட நிகழ்விடத்துக்கு வந்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு விவசாய சங்கத்தினரிடம் குப்பை கிடங்குக்கு மாற்று இடம் இருந்தால் சொல்லுங்கள் அதனை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்கும், 10 நாட்களுக்கு பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


அமைச்சர் சொன்னது - கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணிகள் நடைபெறாத நிலையில், இன்று காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் குப்பை கிடங்கு அமைப்பதற்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். பணி துவங்குவதற்கு முன்பாக அந்த கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்பகுதி விவசாய பெண்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அப்பகுதி ஆண்கள் விரைவாக செயல்பட்டு கிணற்றில் குதித்த பெண்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது  பெண்கள்  விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad