திருவண்ணாமலை,காந்தி நகர்,பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் கடந்த 9ந் தேதி முதல் நடந்து வரும் புத்தக திருவிழா 19-4-23 அன்று நிறைவடைந்ததையொட்டி, நிறைவு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,I.A.S.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில்,பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,I.P.S.அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் சிறை கைதிகளுக்கு தேவையான பயனுள்ள புத்தகங்களை பெட்டியில் தானமாக வழங்கினார்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment