திருவண்ணாமலை - திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு - வடக்கு மாவட்ட அவைத் தலைவர் கோ.கண்ணன் தலைமையில் 26-10-24 அன்று நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் இரா.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ.வேலு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவித்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் சிறிது பாதிப்பு இல்லாமல் பொது மக்களை காத்திட்டமைக்கும், மதுரை, கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் மழை வெள்ளத்திலிருந்து பொது மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் அளித்திட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொட்டும் மழையிலும் பம்பரமாக சுழன்று பணியாற்றிய துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டு தெரிவித்துக் கொள்வது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 8 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஒன்றிய நகர பேரூர், கிளை மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அவர்களோடு தொடர்பு கொண்டு தேர்தல் பணியினை சிறப்பாக ஆற்றிட கேட்டுக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, ஆர்.சிவானந்தம், ஆர்.வேல்முருகன், கே.வி.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திக்வேல் மாறன், எ.டபிள்யூ. சர்தார் காசீம், தொண்டரணி ஷரீப் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் தெற்கு மாவட்ட துணை செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான மு.பெ.கிரி நன்றி கூறினார்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை
No comments:
Post a Comment