பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 15-9-23 அன்று திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டில் நடைபெற்ற விழாவில் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்து மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Card) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்டஆட்சித் தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப. நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், இயக்குநர், செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை எம்எஸ்.தரனிவேந்தன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், இ.ஆ.ப. மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் திருமதி கலைவாணி கலைமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment